Posts

Showing posts from February, 2019

Kurai onrum illai in Saurashtra by Thiruppur Gayathri

Image
"Kurai onrum illai" is a very famous song. Now Thiruppur Gayathri has written lyrics for this song in our Saurshtra language and sung the song also in a melodious voice.  To preserve this song it has been uploaded to this archive. To see this song click on the box with arrow above.   "குறை ஒன்றும் இல்லை" என்ற பாடல் பிரசித்தி பெற்றது. இதை திருப்பூர் காயத்ரி அவர்கள் நம் ஸௌராஷ்ட்ர மொழியில் எழுதி அதை தேனினும் இனிய குரலில் பாடியுள்ளார்.  இந்தப் பாடல் அழியாமல் இருக்க இங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பாடலைக் காண மேலே உள்ள அம்புக் குறியை கிளிக் செய்யவும்.

Saurashtra Geethun "Madhuram Madhuram"

Image
நம் பாரதத் திருநாட்டில் சுமார் 19,500 மொழிகள் பேசப்பட்டு வருவதாக கணக்கெடுப்பில் தெரிய வருகின்றது.  ஆனால், நம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் 23 மொழிகளே அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றன.  அதில் இரண்டு பாரம்பரிய மொழிகள்  (classical language)  உள்ளன. ஒன்று சம்ஸ்கிருதம் மற்றொன்று தமிழ்.  19,500 மொழிகளில் பல, பேசுவோர் இல்லாமல் அழிந்து வருகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன.   நம் ஸௌராஷ்ட்ர மொழி வேதப் பழமை வாய்ந்தது.  வேதகாலத்தில் சம்ஸ்கிருதம் அரசு மொழியாக இருந்தது. ஆனால் பாமர மக்களின் பேச்சு மொழியாக பிராக்ருதம் இருந்தது.  அந்தப் பிராக்ருதம் காலப்போக்கில் தேசத்துக்கு ஏற்றார்ப் போல 5 வகைகளாகப் பிரிந்தன. அவற்றுள் ஒன்று "ஸௌரசேனி பிராக்ருதம்".  அந்த  "ஸௌரசேனி பிராக்ருதம்" என்ற மொழி தான் காலப்போக்கில் நம் "ஸௌராஷ்ட்ர" மொழியாக  பரிணாமித்து உள்ளது.   தற்போது ஸௌராஷ்ட்ர மொழி பேசும் மக்கள், சுமார் 24 லக்ஷம் பேர் இருக்கின்றனர். ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிகளின் தாக்கத்தினால் ஸௌராஷ்ட்ர மொழி பேசுபவர்கள் குறையும் நிலை ஏற்பட்டு உள...