Saurashtra Geethun "Madhuram Madhuram"

நம் பாரதத் திருநாட்டில் சுமார் 19,500 மொழிகள் பேசப்பட்டு வருவதாக கணக்கெடுப்பில் தெரிய வருகின்றது.  ஆனால், நம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் 23 மொழிகளே அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றன.  அதில் இரண்டு பாரம்பரிய மொழிகள் (classical language) உள்ளன. ஒன்று சம்ஸ்கிருதம் மற்றொன்று தமிழ்.  19,500 மொழிகளில் பல, பேசுவோர் இல்லாமல் அழிந்து வருகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன.  

நம் ஸௌராஷ்ட்ர மொழி வேதப் பழமை வாய்ந்தது.  வேதகாலத்தில் சம்ஸ்கிருதம் அரசு மொழியாக இருந்தது. ஆனால் பாமர மக்களின் பேச்சு மொழியாக பிராக்ருதம் இருந்தது.  அந்தப் பிராக்ருதம் காலப்போக்கில் தேசத்துக்கு ஏற்றார்ப் போல 5 வகைகளாகப் பிரிந்தன. அவற்றுள் ஒன்று "ஸௌரசேனி பிராக்ருதம்".  அந்த "ஸௌரசேனி பிராக்ருதம்" என்ற மொழி தான் காலப்போக்கில் நம் "ஸௌராஷ்ட்ர" மொழியாக பரிணாமித்து உள்ளது.  

தற்போது ஸௌராஷ்ட்ர மொழி பேசும் மக்கள், சுமார் 24 லக்ஷம் பேர் இருக்கின்றனர். ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிகளின் தாக்கத்தினால் ஸௌராஷ்ட்ர மொழி பேசுபவர்கள் குறையும் நிலை ஏற்பட்டு உள்ளது.  இதை மாற்றி நம் ஸௌராஷ்ட்ர மொழிக்கு மெருகூட்ட மொழி ஆர்வலர்கள் பலர் முயன்று வருகின்றனர். 

சஹித்திய அகாடமியின் பாஷாசம்மான் விருது பெற்ற. திருமதி.சரோஜா சுந்தரராஜன் அவர்கள் தங்களின் வாழ்க்கையையே மொழியின் மேன்மைக்காக அற்பணித்து உள்ளார்.  

அவர் தற்போது பல இளைஞர்களை ஊக்குவித்து மொழியின் மேன்மைக்காக பல அரிய காரியங்கள் செய்து வருகின்றார்.  

"ஸௌராஷ்ட்ர பாஷா மதுரம் மதுரம்" என்று அழகான பாடலை எழுதி உள்ளார். அதை இசையமைத்து தேனினும் இனிய தேவ கானத்தில் இரண்டு இளம் பெண்மணிகள் பாடியுள்ளனர்.  அவர்கள்......

1. T.R.புவனேஷ்வரி B.Sc.,
    கணவர் பெயர் : Prof.Dr.K.R.பாஸ்கரன், BE,MS,ME,phd., 
   வீட்டுப் பெயர் : திம்மான், குடுவான் தொஸ்கான்       பௌண்டி. கர்னாடக சங்கீதம் பயின்றவர்.  
   கீபோர்டு பழகுகின்றார்- TRINITY COLLEGE OF               MUSIC LONDON. 

2. T.K. அலர்மேலு. 
    வீட்டுப் பெயர் : ஈஷ்வரின் - திருக்கொண்டான்            பௌண்டி.


இந்தப்பாடலை பின்வரும் லிங்கில் கேட்டு ரசிக்கலாம்....




Comments

Popular posts from this blog

"JAARISI GHOMMAA BEDKI" Saurashtra song sung by T.R.Bhuvaneshwari

"Madhuram Madhuram" Saurashtra song sung by group